Monday, July 03, 2006

திவாகர் எழுதிய 'வம்சதாரா' சரித்திர புதினத்தைப் பற்றி:

தமிழரது வீரம், தமிழர் பண்பாடு, ஆவணங்களைக் கூடிய வரை மாற்றாமலே கையாளுதல், நல்லவர் தீயவர் பாகுபாட்டை குழப்பாமல் பாத்திரங்களை அமைத்தல், தமிழ் இலக்கியங்களை கோடி காண்பித்தல், பக்தி பாடல்களுக்கும் இறை உணர்வுகளுக்கும் தாராளமாக இடம் ஒதுக்குதல் மற்றும் எளிய தமிழ் நடையை போற்றுதல் - வம்சதாராவில் இவற்றைக் காணும்போது கல்கி அவர்களின் பரம்பரை சிறப்பாக தொடர்கிறது என்ற நிச்சயம் ஏற்படுகிறது.

புதினத்தின் உன்னிப்பான கட்டமைப்பு ஆசிரியரின் வெற்றி. காதலைக் காமமாக சீரழித்து இலக்கியம் படைக்கும் இந்நாளில் ஆண்-பெண் இடையே மலரும் உணர்ச்சிகளை தூய நெறியில் நடத்திச் செல்லும் ஆசிரியர் பொருளார்ந்த கம்பீரமான புதினத்தைப் படைத்திருக்கிறார். இந்தப் புதினம் காலத்தை வென்று நிற்கும் அணுச்சேர்க்கைகளால் கட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் புதினம் 21ஆம் நூற்றாண்டின் விடிவெள்ளி.

டாக்டர் பிரேமா நந்தகுமார், எழுத்தாளர் - விமர்சகர்

2 Comments:

At 1:29 AM, Blogger ரவி said...

நன்றாக உள்ளது உங்கள் நடை..வாருங்கள் தமிழ்மனத்துக்கு, வரவேற்க்கிறேன்..

 
At 3:34 AM, Blogger V. Dhivakar said...

நன்றி செந்தழல் ரவி,

உங்கள் முகத்தைப் பார்த்தால் குளிர்ச்சியாக இருக்கிறது.
பெயரில் மட்டும் சூடு அதிகம்.

 

Post a Comment

<< Home