சித்திரம் பேசுதடி - சிந்தை மயங்குதடி
நம் நண்பர் விஜய் 'எஸ்.எம்.எஸ். எம்டன்' புத்தகத்திற்காக சிங்கப்பூரிலிருந்து தானே வரைந்து அனுப்பி வைத்த சில சித்திரங்களை இங்கு பதிவு செய்துள்ளேன். ஏன் புத்தகத்திலேயே பதிப்பித்திருக்கலாமே என சிலர் கேட்கலாம். எனக்கும் ஆசைதான். ஆனால் சில வேளைகளில் நம்மையும் மீறி செயல்பட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.
ஒரு வார்த்தையில் வேண்டுமானால் நான் இப்படி சொல்வேன். அவருடைய அழகான பேசும் சித்திரங்களை என் கதையில் போட நான் கொடுத்துவைக்கவில்லை.
சித்திரங்கள் விவரம்:
சிதம்பரம்,கதையின் நாயகன். நிச்சயம் அப்பாவியான சுபாவம் இல்லையென்றாலும் ஒரு நாகரீகமான முறையில் முகபாவத்தை அளித்துள்ளார் விஜய்.
ராதை: நிச்சயம் இவள்தான் இந்தக் கதைக்கு நாயகி என்று சொல்லலாம்.. ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறாள். சுமார் நூறாண்டுகளுக்கு முன் நம் பெண் சமுதாயம் (அதுவும் தமிழகத்தில்) எப்படிப்பட்ட நிலையில் இருந்திருந்தது என்பதை பாரதி பாடல்கள் மூலம் பார்க்கவேண்டும். அந்தக் கற்பனையில் விஜய் வரைந்திருக்கிறார்.
நோபிள்: இங்கிலீஷ்க்காரி என்பதால் நான் என்ன இரண்டாம் கதாநாயகியா என்று சண்டைக்கு வந்துவிடுவாள். ஆகையினால் இவளையும் நாயகி என்ற முறையிலேயே விஜய் வரைந்திருக்கிறார்.
சிரேஷ்டியார்: கதையில் சில முக்கியகட்டங்களின் சூத்திரதாரி. அவருக்கென ரூபம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சில நாட்கள் யோசித்துதான் விஜய் இவர் படத்தை வரைந்திருக்கிறார். மீசை வைத்த சிரேஷ்டியார்.. உம்.. பலே..
முகப்புப் படம்: இது விஜய் மனதில் எம்டன் புத்தகத்திற்காக அவர் போட்ட அழகான வடிவமைப்பு. முகப்பைப் பார்த்தால் யோகாவுக்கும் எம்டன் கப்பலுக்கும் என்ன சம்பந்தம் என்று வாசகர்களுக்குக் கேட்கத் தோன்றும்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் படம் வரைந்தால் எப்படி என்ற எண்ணத்தில் முதல் அத்தியாயத்தில் வரும் சமாதிக்கோயிலையும் விடவில்லை விஜய்.
சிற்பிகளின் கலைவண்ணத்தை மிக அழகாக வெளிக் கொணரும் விஜய் அவர்களுடைய கலைத்தாகம் சித்திரம் வரைவதிலும் வெளிப்படுவது மகிழ்ச்சியான செய்திதான். எதிர்காலம் முழுவதும் அவருடையதுதான்.
விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.
திவாகர்
சிதம்பரம்
ராதை
நோபிள்
சிரேஷ்டியார்
முகப்பு (அட்டைப்படம்)
முதல் அத்தியாயம் - சமாதிக்கோயில்
12 Comments:
மிக்க நன்றி சார்,
ரசித்து வரைந்தவை, புதினந்தில் இடம் பெற வில்லையே என்று ஒரு நெருடல் இருந்தது....இதுவரை. நீங்கள் சொல்வது போல அல்ல, உங்கள் அற்புத படைப்பில் என் படங்கள் இடம் பெற நான் கொடுத்து வைக்கவில்லை.
எனினும். சில குறிப்புகள்.
கதா நாயகன் - ஒரு பிரபலத்தின் முகத்தை வைத்து வரைந்தது.( யார் ?) எனினும் கண்களில் ஒரு தெளிவு இல்லாத நிலை, எதையோ தொலைத்து விட்டு என்னவென்று கூட தெரியாத தோற்றம் - அது தெரியவேண்டும் என்பதற்காக வரைந்தது. சற்று சிறுபிள்ளை போல இருக்கவேண்டும் ..அதுவும் டாக்டர். மீசை கொஞ்சம் சரியாக வரவில்லை.
ராதை - முகத்தில் தெளிவு, கொள்ளை அழகு , பக்தி, அமைதி, நோக்கத்தில் ஒரு மேன்மை கலந்த உறுதி.
நோபிள் - அமைதி, இளமை துள்ளல் - எப்படி இரண்டையும் காட்டுவது. அதனால் யோகா செய்வது போல காட்டிவிட்டேன்.
சிரேஷ்டியார் - ஸ்பெஷல் மனிதர். ஊடுருவும் கண்கள், மிரட்டலான உருவம், ஒரு கிராமத்து பெரியவர் போல கற்பனை. மீசை கம்பீரமாக வந்தது. எடுக்க மனம் இல்லை
முகப்பு (அட்டைப்படம்)
கதையின் கரு - அப்படியே உல் வாங்கும் படி - இரு புறமும் எம்டேன் குண்டுக்கு இரையான சென்னை என்னை கிடங்கு - நடுவில் நோபிள். இவற்றிற்கு மேலே தன் கம்பீர கொடியுடன் எம்டேன் கப்பல். பெயர் பலகை ஒரிஜினல் எம்டேன் மாலுமியின் உடையின் பட்டை போல உரு கொண்டது.
முதல் அத்தியாயம் - சமாதிக்கோயில்
மிகவும் எளிமையான படம். எனினும் எனக்கு மிகவும் பிடித்தது. முதல் பாகம் ஆரம்பத்தில் வரவேண்டும் என்று ஆசை. அந்த படத்தை பார்க்கும் போதே ஒரு கேள்வி உருவாகும், ஒரு தேடல் ஆரம்பிக்கும்.
இப்படி பல கனவுகள், எல்லாம் உங்கள் புதினத்தை படித்ததன் பலன்.
நன்றி
விஜய்
நாவலைப் படிக்காததால் படங்களின் பொருத்தம் பற்றிக் கூற முடியவில்லை, என்றாலும் படங்களின் நேர்த்தி கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளன. புத்தகத்தில் இடம் பெறச் செய்திருக்கலாம். :(((((((( கதாநாயகன் முகம் எனக்கும் ஒரு பிரபலத்தின் முகத்தை நினைவூட்டியது. நன்றி.
What a handwork Vijay! The expressions, stance and the looks - all reflecting the textual textures!
விஜய், அருமை! பல கோவில்கள் பார்த்திருப்பீர்கள். temple-art எனும் themeல் ஒரு சித்திரக் காட்சி வைக்க நானும் ஒரு வருடமாய் சித்திரங்கள் - நான் கண்டகோவில்களிலுள்ள வித்தியாசமான கோணங்களை collage முறையில் உருவாக்கி வருகிறேன். ரகோத்தமன் தம்பி, தாய் மற்றும் சில ஓவிய நண்பர்களையும் உடன் சேர்த்து சென்னையில் நடத்தத் திட்டம். விற்று வரும் பணத்தை ரீச் பவுண்டேஷன் கோவில்கள் புனரமைப்பு திட்டங்களுக்கு தர எண்ணம். தாங்களும் பங்கேற்கலாமே?
சந்திரா
அன்பின் சந்திரா
நல்ல முயற்சி. தனி மடல் எழுதுகிறேன்
விஜய்
விஜய்! ரங்கனாரே புகழ்ந்து தள்ளிவிட்டார். இதைவிட இன்னும் என்ன வேண்டும்?
கீதாம்மா - கட்டாயம் படியுங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
ரங்கன் - உங்கள் வாழ்த்து விஜய்க்கு நிச்சயம் வெள்ளியின் படிக்கட்டுகளாக அமையும்
சந்திரா: உங்கள் உழவாரப் பணி சிறக்க வாழ்த்துகள்!
திவாகர்
வெற்றியின் படிக்கட்டுகள் வெள்ளியின் படிக்கட்டுகள் என பதிவாகிவிட்டன. சரி.. வெள்ளிப்படிக்கட்டுகள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்
தி
விஜய்,
அருமையான சித்திரங்கள். அதிலும் முகப்பு அட்டைக்கான சித்திரம் மிக பொருத்தம். கதையை ரசித்துப் படித்தவன் என்ற முறையிலும், திவாகரின் நெருங்கிய நண்பன் என்ற முறையிலும் சொல்கிறேன், உங்கள் அந்தப் படத்தை அட்டையில் போட்டிருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும்.
முயற்சி தொடரட்டும்.
வெற்றி நிச்சயம்
மனோகரன்
விசாகப்பட்டினம்
மனோகர்,
சரிதான்.
தி
விஜய்,
கலக்கிட்டீங்க. அப்பப்பா என்ன ஒரு கற்பனை! உண்மையில் இந்த படங்களோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் படங்களை இணைத்திருந்தால் எம்டன் எனும் தங்கத்திற்கு மேலும் மெருகேறியிருந்திருக்கும். நான் மிகவும் இரசித்து படித்தக் கதை, என்னால் மிகவும் வேகமாகக் கூட படிக்கமுடியவில்லை காரணம் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் கற்பனை செய்து பார்த்தே படித்தேன், படித்தேன் என்பதை விட இந்த கதையோடு வாழ்ந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்தில் சிதம்பரம் நோபிளிடம் சொல்வார் அரசாங்கத்தை சார்ந்து மக்கள் மாறுவதில்லை, அரசாங்கத்தின் துன்பங்கள் மக்களை பாதிக்காது ஒவ்வொருவரும் சுயதேவைகளை தானே பூர்த்திசெய்துகொள்வர் என்பது போல ஆனால் இன்று உலகமயமாக்கலினால் எவ்வளவு மாறிவிட்டது, உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் பாதிப்பு ஏற்பட்டால் அது அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கிறதல்லவா! (மன்னிக்கவும் நூல் தற்சமயம் என்னிடம் இல்லாமையால் அசல் வாக்கியத்தை இடமுடியவில்லை).வார்த்தைகளால் திவாகர் மயக்கினார் என்றால் உங்களது ஓவியங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன. ஆனால் இது அந்த நூலில் வந்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். பராவாயில்லை, திவாகர் சார் இரண்டாவது பதிப்புல முயற்சி பண்ணுங்க. இராதையின் ஓவியம் அற்புதம், மச்சு சிரேட்டியார் மிரட்டுகிறார்.பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!
சதீஷ்
அசத்தறிங்க.. மிக மிக நன்றி!
திவாகர்
ஐயா
மிகவும் அருமையான சித்திரங்கள். தங்களது எஸ் எம் எஸ் எம்டன் நாவலை மிகவும் ரசித்து படித்திருக்கிறேன். அவ்வாறே இந்த சித்திரங்களும் கண்களை கொள்ளைகொள்கின்றன. அதிலும் சிரேஷ்டியர் படம் மிக அற்புதமாக உள்ளது. விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவற்றை நாங்கள் காணும்படி தங்களது பதிவில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
வர்தினி.
Post a Comment
<< Home