உறவுகள் எத்தனையோ எனக்குண்டு
பரிவோடு அத்தனையும் சொல்கின்றேன்கேள்
அண்ணன்மார் தம்பிமார் அக்காதங்கைகளும்
அண்ணிகளாம் அவள்தந்த சொந்தங்களாம்
மாமனெம்பார் மாப்பிள்ளையென்பார் அன்பான
மாமியென்பார் மைத்துனியென்பார் சகலையென்பார்
அவனோர் அம்மான் சிறிசானாலும்
இவனென் மருமான் புள்ளிமான்போல
நாணத்துடன் நிற்பவள் என் முறைமான்
தேனொழுக அத்தான் எனவழைப்பாள்
சும்மாவே இருக்கும் இவரெனக்கு
அம்மாஞ்சி என்றே பெயருண்டு
பெரியப்பா பெரியம்மா பெரியக்கா
பெரியண்ணா பெரியத்தை என்றே
பெருங்கூட்டப் பெரிசுகள் எனக்குண்டு
அன்பான அம்மாவழி சித்திகளும்
பண்பான அப்பாவழி சித்தப்பன்களும்
இவரல்லாமல் சித்தியார் பெற்றபெண்ணும்
இவளோடு உதித்த தம்பிமாருமுண்டு
உதிரத்தால் வந்தசொந்தங்கள் இவரென்றால்
மதிகொண்ட மனைவியால் எனைச்சேர்ந்த
பந்தங்கள் பலவகையாய் பலபேருண்டு
சொந்தங்கள் எங்கெங்கும் கணக்கிலாமல்
எத்தனையோ இருந்தாலுமென் நாவினிலே
அத்தனை பெயர்களையும் ஒருபோதும்
மறவாமல் பெயர்சொல்லி அழைக்காமல்
உறவின் பெயர் சொல்லியழைப்பேனடா
"இத்தனை உறவுகளை" என்மகனே
அத்தனையும் என்பாட்டன் என்னப்பனுக்கு
சொன்னதை மறக்காமல் எனக்கும்தான்
என்னப்பன் அப்படியே சொன்னாலும்
இத்தனை உறவுகள் என்னப்பனுக்கில்லையடா
அத்தனை சொந்தங்கள் இல்லைதான்
ஏதோ பேருக்குசில பேர்களென்றே
தோதான சிலசொந்தம் என்னப்பன்
எனக்களித்த அன்பான கூட்டம்போல்
என்மகன் உனக்காக என்மூலம்
வரவில்லை என்றாலும் மகனே
வரம்போல அம்மாவும் அப்பாவும்
யாமிருக்க பாட்டனும் பாட்டியும்
யாமுனக்கு தந்தோம் ஆனாலும்
வரும்காலம் உறவுகள் என்றேதுமில்லையென
இருக்கின்ற விஞ்ஞானம் முழங்குதடா
பிறக்கும் குழந்தையின் சுவடுகளேயில்லாமல்
கருப்பைக்குள் வைத்திடாமல் காப்பாற்ற
சோதனைக்குழாயாம் பரிணாமப் பிறப்புகளாம்
வேதனையாய் இருக்குதடா கேட்பதற்கு
தாயும் தந்தையும் பேருக்கென உண்டாம்
சேயொன்று பெற்றிடுவாராம் சிரமமில்லாமலே
நான் இன்றுனக்கு ஒன்றுரைப்பேன்கேள்
நானுனக்கு என்பாட்டன் எடுத்துரைத்த
உறவுகள் பெயர்யாவும் சீரியகல்கொண்டு
மறக்காமல் உளியெடுத்து செதுக்கி
இவையாவும் வருங்காலம் தெரியவே
சுவையாக எழுதிவை என் மகனே!
உறவுகளெல்லாம் காலத்தின் கொடுமைக்கு
சிறகொடிந்த பறவையாய் சீரழிந்தகதையை
நாளைய மனிதனெனும் ஓர்பிறவி
மூளைகொண்டு படித்தாலும் படிக்கலாம்
அடடா இப்படியெல்லாம் உறவுப்பெயர்கள்
கூட்டாக ஒருகாலத்தில் இருந்தனவாம்
ஒன்றேயொன்றான எமக்கிது புதுசெய்தி
என்றெலாம் பலசொல்லி வியக்கலாம்.
பரிவோடு அத்தனையும் சொல்கின்றேன்கேள்
அண்ணன்மார் தம்பிமார் அக்காதங்கைகளும்
அண்ணிகளாம் அவள்தந்த சொந்தங்களாம்
மாமனெம்பார் மாப்பிள்ளையென்பார் அன்பான
மாமியென்பார் மைத்துனியென்பார் சகலையென்பார்
அவனோர் அம்மான் சிறிசானாலும்
இவனென் மருமான் புள்ளிமான்போல
நாணத்துடன் நிற்பவள் என் முறைமான்
தேனொழுக அத்தான் எனவழைப்பாள்
சும்மாவே இருக்கும் இவரெனக்கு
அம்மாஞ்சி என்றே பெயருண்டு
பெரியப்பா பெரியம்மா பெரியக்கா
பெரியண்ணா பெரியத்தை என்றே
பெருங்கூட்டப் பெரிசுகள் எனக்குண்டு
அன்பான அம்மாவழி சித்திகளும்
பண்பான அப்பாவழி சித்தப்பன்களும்
இவரல்லாமல் சித்தியார் பெற்றபெண்ணும்
இவளோடு உதித்த தம்பிமாருமுண்டு
உதிரத்தால் வந்தசொந்தங்கள் இவரென்றால்
மதிகொண்ட மனைவியால் எனைச்சேர்ந்த
பந்தங்கள் பலவகையாய் பலபேருண்டு
சொந்தங்கள் எங்கெங்கும் கணக்கிலாமல்
எத்தனையோ இருந்தாலுமென் நாவினிலே
அத்தனை பெயர்களையும் ஒருபோதும்
மறவாமல் பெயர்சொல்லி அழைக்காமல்
உறவின் பெயர் சொல்லியழைப்பேனடா
"இத்தனை உறவுகளை" என்மகனே
அத்தனையும் என்பாட்டன் என்னப்பனுக்கு
சொன்னதை மறக்காமல் எனக்கும்தான்
என்னப்பன் அப்படியே சொன்னாலும்
இத்தனை உறவுகள் என்னப்பனுக்கில்லையடா
அத்தனை சொந்தங்கள் இல்லைதான்
ஏதோ பேருக்குசில பேர்களென்றே
தோதான சிலசொந்தம் என்னப்பன்
எனக்களித்த அன்பான கூட்டம்போல்
என்மகன் உனக்காக என்மூலம்
வரவில்லை என்றாலும் மகனே
வரம்போல அம்மாவும் அப்பாவும்
யாமிருக்க பாட்டனும் பாட்டியும்
யாமுனக்கு தந்தோம் ஆனாலும்
வரும்காலம் உறவுகள் என்றேதுமில்லையென
இருக்கின்ற விஞ்ஞானம் முழங்குதடா
பிறக்கும் குழந்தையின் சுவடுகளேயில்லாமல்
கருப்பைக்குள் வைத்திடாமல் காப்பாற்ற
சோதனைக்குழாயாம் பரிணாமப் பிறப்புகளாம்
வேதனையாய் இருக்குதடா கேட்பதற்கு
தாயும் தந்தையும் பேருக்கென உண்டாம்
சேயொன்று பெற்றிடுவாராம் சிரமமில்லாமலே
நான் இன்றுனக்கு ஒன்றுரைப்பேன்கேள்
நானுனக்கு என்பாட்டன் எடுத்துரைத்த
உறவுகள் பெயர்யாவும் சீரியகல்கொண்டு
மறக்காமல் உளியெடுத்து செதுக்கி
இவையாவும் வருங்காலம் தெரியவே
சுவையாக எழுதிவை என் மகனே!
உறவுகளெல்லாம் காலத்தின் கொடுமைக்கு
சிறகொடிந்த பறவையாய் சீரழிந்தகதையை
நாளைய மனிதனெனும் ஓர்பிறவி
மூளைகொண்டு படித்தாலும் படிக்கலாம்
அடடா இப்படியெல்லாம் உறவுப்பெயர்கள்
கூட்டாக ஒருகாலத்தில் இருந்தனவாம்
ஒன்றேயொன்றான எமக்கிது புதுசெய்தி
என்றெலாம் பலசொல்லி வியக்கலாம்.
20 Comments:
வரும்காலம் உறவுகள் என்றேதுமில்லையென
இருக்கின்ற விஞ்ஞானம் முழங்குதடா
பிறக்கும் குழந்தையின் சுவடுகளேயில்லாமல்
கருப்பைக்குள் வைத்திடாமல் காப்பாற்ற
சோதனைக்குழாயாம் பரிணாமப் பிறப்புகளாம்
வேதனையாய் இருக்குதடா கேட்பதற்கு
தாயும் தந்தையும் பேருக்கென உண்டாம்
சேயொன்று பெற்றிடுவாராம் சிரமமில்லாமலே//
முழுதும் உண்மை. அதுவும் பெரும்பாலான பெற்றோர்கள் தற்சமயம் ஒன்றுக்கு மேல் கூடாது என்றும் இருப்பதால் கூடப் பிறந்த பிறப்பைக் கூட உறவின் பெயர் சொல்லி அழைப்பது என்பதும் தெரியாமல் போய்விடும். பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி, சிந்திக்கவேண்டும். இப்போவே அம்மாஞ்சி யாரு, அத்தங்கா யாருனு கேட்கிறாங்க! :(((((
to follow
கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள் திவாகர்ஜி.
நம் தலைமுறைகள் இழந்து வருகின்ற பாரம்பர்ய சந்தோஷங்களில் உறவு முறைகளும் ஒன்று.
இனிமேல் எல்லாமே, அங்கிள், ஆன்ட், கசின், நெவ்யூ, நீஸ் தான்.
uravugal thodarkathi..
I am sure the same would have been the sentiment of my grandfather, the degree of extented family would have diminished with their migration. They should have also lost contact with many of those extended family. If these where all closely maintained and the tree and chain managed, we would not have either communities, religious splits or even ethinic differences.
Babel incident is key collasal split reason for split as per the jewish, christian religious belief. I believe the primal nature of the humans to expand the horizons is in conflict with its attachement to the roots. The struggle has always been and will continue to be.
Having said this, man is necessarily a social animal, he will make his relations with available people to satiate his emotional needs.
I enjoyed this post. It let me thinking. Thanks.
true.. our children's children would follow yaadum ooray yaavarum keleer literally... as our generation moved out of our native state to different states with in the country, future generation would move from country to country and continent to continent, and would truly be global citizens! Not to worry Divakargaru!
thanks to facebook, we are back in touch with our extended family !!
uravugalin sirappai anaivarum unarvade mudumai nerungumpodudhan.atthai sithappa periyappa mama,mamipondra uravugale sugamanavai.
very nice
அருமை திவா.
நெஞ்சை தொட்டது. இன்றைய இளம் வயதினர் மிகவும் தெரிந்து/புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
ஆனால், பணம் இருந்தால் தான் பந்தம் என்றாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், உறவினர்களை விட, உன் போன்ற நண்பர்கள் தான் கடைசி வரை உறவு. இது நான் அனுபவத்தில் புரிந்து கொண்டது. நான் இந்த blogகிற்காக சொல்லவில்லை. உள் மணதின் ஆழத்திலிருந்து எழுதுகிறேன். நன்றி
கீதாம்மா!
இந்தப் பதிவின் மூலம் ஒரு தொடரையே மின் தமிழில் தொடங்கியிருக்கிறீர்கள்.
இந்த அத்தங்கா, ஓர்ப்படி இவையெல்லாம் விட்டுவிட்டேன் (எனக்கே தெரியாது என்பதினாலா எனக் கேட்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை)
அஸ்வின் ஜி! இன்றைய தலைமுறைகளின் தவறுகளுக்கு மூத்தவர்களுக்கும் சற்று பொறுப்பு உண்டு என்று நினைக்கிறேன். மம்மி என்றால் சவத்துக்கும் ஒரு பெயர் என்று இன்னமும் தெரியாதோர் உண்டு. அத்துடன் ஆங்கிலத்தில் மம்மி எனக் கூப்பிடும்போது அம்மாவுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது (தப்பான பெருமைதான்)
அரவிந்த்!
I wrote one short story on Uravugal thodarkathai.. it is available in www.vallamai.com where the migrated people's loss of relations and emotions are talked.
>man is necessarily a social animal, he will make his relations with available people to satiate his emotional needs.<<
Golden words Arvind. Thanks for posting.
>>Not to worry Divakargaru!<<
Uma! I will take your words.
Vijay!
FB, as of now only time passing in public. May be a place for old friends and relatives for having a constant touch. Informations reaching everybody. But can it revive the spirits of actual relationship? I doubt.
Thanks Thamizhththai!
>பணம் இருந்தால் தான் பந்தம் என்றாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், உறவினர்களை விட, உன் போன்ற நண்பர்கள் தான் கடைசி வரை உறவு. இது நான் அனுபவத்தில் புரிந்து கொண்டது<
உற்றார்கள் எமக்கில்லை யாருமென்னும்
உற்றார்கள் எனக்கிங்கே எல்லாருமென்னும் (நம்மாழ்வார்)
இதுதானே நீ சொல்லவந்தது.
நன்றே சொல்கிறாய்
Nice to read this when I am in my native place
Where I was born & brought up
I feel its all compulsions of time
Many things are to be compromised when ever a change is coming up. In the change of Globalization, may be we have compromise on the " Uravugal"
But we have to see the other side, we are benefited with the voice / video chat with our kith & kin in the other side of the Globe, face book, orkut and what not...
If I was sticking on to my Chithappas & peryappas, sure I would have not met all good friends in Viskha Tamil Kalai Mandram, Dutta's, Srivastavas, Reddy's & Guptas, Gaur & Randhawas.....
Smartness is to learn to have the minimum effect when changes are to be met.....
Yes Commander!
Whole Vizag is your relations only. So no worry for you.
//அடடா இப்படியெல்லாம் உறவுப்பெயர்கள்
கூட்டாக ஒருகாலத்தில் இருந்தனவாம்
ஒன்றேயொன்றான எமக்கிது புதுசெய்தி
என்றெலாம் பலசொல்லி வியக்கலாம்.//
மிகவும் அருமையான பதிவு ஐயா!
தற்போது இருக்கும் நிலையை வைத்துப் பார்த்தால், எதிர்காலத்தில் உறவுமுறைகளை அறிந்து கொள்வதே கடினம் தான். சிந்திக்கத் தூண்டும் பதிவு.
நன்றி
வர்தினி.
வர்தினி,
ஆதங்கம்தான்.. நாகரீகத்தின் உச்சகட்டம் என்பதே இழப்புகளின் பிரதிபலிப்புதான்..
Post a Comment
<< Home