Thursday, August 13, 2009

ஒரு தாயின் பரிசு

டாக்டர் பிரேமா நந்தகுமார், கொடுக்கும்போது தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்களே, அந்த வகையைச் சேர்ந்தவர். என் முதல் நாவல் வம்சதாராவுக்கு முன்னுரை (அணிந்துரை) வேண்டுமென நானும் பெரியவர் சம்பத்தும் கலந்து ஆலோசித்தபோது, சம்பத் அவர்கள், பிரேமா நந்தகுமார் அவர்களைக் கேட்போமே என்று அவருக்கு தொலைபேசி மூலம் பேசினார். என்னை அவர் அந்நாள் வரை அறிந்தவர் இல்லையென்றாலும், புதிய எழுத்தாளனுக்கு உற்சாகம் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் உடனடியாக ஒப்புக் கொண்டார். நானும் நர்மதா பதிப்பகத்தாரிடம் பேசி புத்தகத்தின் ஒரு நகல் பதிப்பை அனுப்பச் சொல்லியாயிற்று.

டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்கள் பல கலைகளில் புகழ்பெற்றவர். தி ஹிந்து நாளிதழில் இவரால் பாராட்டப்படமாட்டோமா என்று ஏங்கும் எழுத்தாளர்களை நான் அறிவேன். சிறந்த விமர்சகர். சிறந்த பேச்சாளர். அதுவும், தமிழ், தெலுங்கு, வடமொழி மற்றும் ஆங்கிலம் நான்கு மொழிகளில் இவர் பேச்சை மிக சரளமாகப் பேசக்கூடியவர். அரவிந்தரின் கொள்கைகளில் மிக ஈடுபாடு உடையவர். நிறைய எழுதும் அளவுக்கு நிறையப் படிப்பவர் கூட.. ஆங்கிலத்திலும், தமிழிலும் இவர் புத்தகங்கள் சாஹித்ய அகடமி சார்பிலும் தனியாகவும் வெளியிடப்பட்டுள்ளன. நம்மாழ்வாரும் ஸ்ரீரங்கமும் இவர் இதயத்துக்கு மிக அருகில் என்றால் மாணிக்கவாசகரின் தமிழையும், சேக்கிழாரின் பெரியபுராணத்தையும் மிக அதிகமாக நேசித்தவர், ஆண்டாளின் திருப்பாவை கீதங்களும் அதன் மேன்மையான பொருளும் திருச்சி வானொலியில் கேட்டுப் பயனடைந்தோர் அதிகம். அவரே பாடுவார். சகலகலாவல்லவர். அரவிந்தர் குறித்த இவருடைய சொற்பொழிவுகள் இந்தியாவெங்கும் பிரபலமானவை.

சரி.. இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், 620 பக்கங்கள் உடைய என் வம்சதாராவை இவருக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தில் எப்போது படித்து, எப்போது அவர் பதிப்பகத்துக்கு அனுப்புவார் என நான் அந்த காலக் கட்டத்தில் கவலைப்பட்டதுதான்.

அடியேன் கவலைப்பட்டது போலத்தான் நடந்தது. ஸ்ரீரங்கத்தில் புத்தகம் அவர் மேஜையில் இருந்த காலத்தில் இவர்கள் சொற்பொழிவுகளுக்காக வேறு இடம் சென்றிருந்தார். நேரம் நெருங்கிப் போனதால், பதிப்பாளர் நெருக்கினார்.. இங்கிருந்து நானே ஸ்ரீரங்கம சென்று அவர்களையும் ஒருமுறை பார்த்து நேரடியாகவே விஷயத்தைச் சொன்னால் என்ன என்று தோன்றியதால் 2003 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 2 ஆம்தேதி அவரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அன்று காலைதான் அவர் வந்திருந்தார். முதன்முதலாக அப்போதுதான் அவரைப் பார்க்கின்றேன். அப்படியே விழுந்து வணங்கவேண்டுமெனத் தோன்றும் முகம். அவரிடம் காரணத்தைச் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே, தன் வேலைப் பளுவைச் சொல்லிவிட்டு, முடிந்தவரை பதினைந்து நாட்களுக்குள் பதிப்பகத்தாருக்கு அனுப்பிவிடுவதாகவும்
சற்று தயக்கமாகவே சொன்னார். எனக்குப் புரிந்தது. நான் கொடுத்த புத்தகத்தின் கனம் யாருக்குமே சற்று பயத்தை உண்டாக்கும்தான்.

நான் திரும்பி வந்துவிட்டேன். நான்கு நாட்கள் கழித்து அதாவது 7ஆம்தேதி பதிப்பகத்தாரிடமிருந்து தொலைபேசி, அணிந்துரை வந்துவிட்டது என்று. அதே நாளில் எனக்கு டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள். புத்தகம் ஒரே இரவில் படிக்கப்பட்டதாகவும், ஆனால் விமர்சனமோ, அல்லது முன்னுரையோ எழுதப்படும்போது இரண்டு முறை படிப்பது வழக்கமாதலால், இரண்டு முறையும் படித்து தன் உரையை அனுப்பிவிட்டதாகவும் எழுதி இருந்தார்.

வம்சதாராவில் அவர் எழுதிய அணிந்துரை அடியேனுக்கு சரஸ்வதி கடாட்சமாக தெரிந்தது. அடுத்து வரும் புத்தகங்களான திருமலைத் திருடனுக்கு ‘ஹிந்து’வில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பிறகு என்னுடைய மூன்றாவது நாவலான விசித்திரசித்தன் புத்தக வெளியீட்டு விழா திருச்சியில் நடந்தபோது அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து புத்தக அறிமுக உரையாக மேடையில் பேசி பாராட்டினார்.

என் அடுத்த நாவலான எஸ். எம்.எஸ். எம்டன் நாவலைப் பற்றி என் தாய் எனக்கு எழுதிய கடிதம் இன்றுதான் கிட்டியது. இதோ

Prema Nandakumar Mudhal Tirumaligai
M.A., Ph.D. 152/ 91, South Chitrai Street
Srirangam – 620 006

e-mail: premnand@dataone.in
Phone (0431) 2432959/2434265

Dear Sri Dhivakar:

Thank you for S.M.S.Emden. You have done it again! Of course, as you say rightly, this is somewhat different from the earlier novels which were more in Kalki-style.I don't think anybody has attempted a full scale novel on this period. You have chosen the right person to introduce the novel. Sri Narasayya has given us the 'rasa' of the novel so beautifully.

I remember reading a small book on Champakaraman Pillai: was it by "Rakami"? Or "Pe.Su.Mani"?

You do have a fine way of interweaving the sacred and secular sides of our society in all your novels. While the entire novel is an interesting read, a few passages have come out with special thrust. Like the destruction of Jemtchug, the Russian cruiser and the French destroyer Mousquet; the Australian HAMS Sydney turning up so unexpectedly to mark the end of Emden’s terrible spree under the direction of chart, Captain von Müller; and the interweaving of the past and the present in the Makutaagama Ritualism. It all sounds like a closely embroidered detective story with a touch of the Gothic in it.

I have a particular interest in this novel because the two World Wars were very much of my growing up as my father and brother used to discuss them for long (both were students of history and used to write extensively on the subject). My brother used to present me lots of history books like Alan Bullock’s Adolf Hitler. So the names and contexts were familiar enough when I took up the novel. Thank you very much for an absorbing historical experience, quite different from the “far away and long ago” romanticism of Vamsadhara, Trumalai Tirudan and Vichitra Chittan. And of course your quoting Sri Aurobindo in your introduction makes the novel dear to me too.

Thanking you once again and with every good wish,

Yours sincerely
Prema Nandakumar


அம்மாவுக்கு இந்தக் குழந்தை எதைத் திருப்பித் தரமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை, அந்தத் தாயன்பில் கரைந்து போவதைத் தவிர..

திவாகர்

Labels: