Monday, July 03, 2006

திவாகர் எழுதிய 'வம்சதாரா' சரித்திர புதினத்தைப் பற்றி:

தமிழரது வீரம், தமிழர் பண்பாடு, ஆவணங்களைக் கூடிய வரை மாற்றாமலே கையாளுதல், நல்லவர் தீயவர் பாகுபாட்டை குழப்பாமல் பாத்திரங்களை அமைத்தல், தமிழ் இலக்கியங்களை கோடி காண்பித்தல், பக்தி பாடல்களுக்கும் இறை உணர்வுகளுக்கும் தாராளமாக இடம் ஒதுக்குதல் மற்றும் எளிய தமிழ் நடையை போற்றுதல் - வம்சதாராவில் இவற்றைக் காணும்போது கல்கி அவர்களின் பரம்பரை சிறப்பாக தொடர்கிறது என்ற நிச்சயம் ஏற்படுகிறது.

புதினத்தின் உன்னிப்பான கட்டமைப்பு ஆசிரியரின் வெற்றி. காதலைக் காமமாக சீரழித்து இலக்கியம் படைக்கும் இந்நாளில் ஆண்-பெண் இடையே மலரும் உணர்ச்சிகளை தூய நெறியில் நடத்திச் செல்லும் ஆசிரியர் பொருளார்ந்த கம்பீரமான புதினத்தைப் படைத்திருக்கிறார். இந்தப் புதினம் காலத்தை வென்று நிற்கும் அணுச்சேர்க்கைகளால் கட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் புதினம் 21ஆம் நூற்றாண்டின் விடிவெள்ளி.

டாக்டர் பிரேமா நந்தகுமார், எழுத்தாளர் - விமர்சகர்

திருமலைத் திருடன்

சரித்திர நவீனம் - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பதியின் திருமலையில் ஏற்பட்ட சர்ச்சையின் அடிப்படியினை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

நின்ற நிலையில் மலையில் காட்சி தந்து தன்னைத் தேடி வரும் பக்தர்கள் அனைவரையும் காத்து ரட்சித்து அவர்கள் கோரும் வரங்கள் அனத்தையும் வாரி வழங்கும் வள்ளல் அந்த திருவேங்கடவன். அவன் யார்? சிவனா? பெருமாளா? என்ற கலவரம் தோன்றிய ஒரு கட்டத்தில், சைவர்களும் வைணவர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது வைணவப் பெரியாரான உடையவர் ராமானுஜர் திருமலை ஏறிச் சென்று அந்த திருவேங்கடவன் சாட்சாத் திருமால்தான் என்று வைணவத்தை நிலை நாட்டியதாக சரித்திர சான்றுகள் தெரிவிக்கின்றன.

அந்த கால சோழர்களின் ஆட்சி, சாளுக்கியர்களின் அதிகார அத்துமீறல், மதங்களுக்குள் உள்ள போட்டி மனப்பான்மை
வேங்கடவன் கோவில் எப்படி தோன்றையது - இத்த்கைய வரலாறுகளின் திரட்டலோடு, திருவேங்கடவன் அருள் கொண்டு எழுதப்பட்ட புதினம்தான் 'திருமலைத் திருடன்'.

இப் புதினத்திற்கு மதிப்புரை வழங்கி கெளரவித்தவர் முனைவர் திரு சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள்.

பெரியவர்கள் பலர் படித்து பாராட்டியுள்ளார்கள். அவர்களின் ஆங்கிலக் கடிதங்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

எல்லோருடைய மதிப்புக் கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன.

பிரதிகளுக்கு : திவாகர்,வி. (vdhivakar@rediffmail.com)
நர்மதா பதிப்பகம்,10, நாநா தெரு, தி.நகர், சென்னை - 17.